காவு வாங்கிய கடல் அன்னை


அதிகாலை! லட்சியத்தை நோக்கி  புறப்படும் வேளை

ஆகாயத்தில் பறவைகள் பாட்டொலிக்க

அலைகள் ஸ்ருதியோடு தாளமிட

கிருத்துவ தேவாலயங்களில்  பிராத்தனைக் கூட்டம்.

மீனவர்கள் வாழ்வாதரத்தை தேடி கடலுக்குள் செல்ல

மான் போல் மண்ணில் மழலைகள் துள்ளி விளையாட

இயற்கை ரம்மியத்தை இயம்ப இல்லையோ வார்த்தைகள் என்ற ஏக்கம் !

 தாயாய் அரவணைத்த கடல் தீடீரென்று ஆர்ப்பரித்தாள் 

 அவளிடம் தான் எத்தனை கோவம்! எத்தனை காட்டம்!

இவள் வரமளிக்கும் தேவதையா?

பழி வாங்க வந்த ஏமனா?

'தான்' என்ற அகந்தையா? மனித குலத்தின் மேல் பகையா?

மண்டையில் அடித்தால் மண்டியிடும் புழுக்களல்ல நாங்கள்!

எத்தனை முறை வீழ்ந்தாலும் வெற்றிக்கனியை பறித்தேயாகும் மானுட பிறவிகள்!

 காலங்கள் கடந்தோடியும் காயங்கள் மறையவில்லை அலைகள் என்றும்

ஓய்வதில்லை மனிதகுலம் இன்னும் மாயவில்லை 

விடா முயற்சியுடன் போராடுவோம்!

வஸந்த காலம் எங்கள் வாழ்வில் பிறக்க செய்வோம்

இயற்கையை வசபடுத்துவோம்- இயற்கையோடு

இயந்த வாழ்வு வாழ்ந்து உயர்வோம்!


COURTESY : ABI

Brought to you by INTERNET_FREAK : A.Bharathan


EmoticonEmoticon